ஒன் மினிட் எக்ஸ்ட்ரா
இந்த ஆண்டு ஜுன் 30ம் தேதி ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்
லண்டன்: இந்த ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி வழக்கத்தை விட ஒரு விநாடி கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.
அணுவியல் நேரம் எப்போதும் மாறாத இயல்பு உடையது. ஆனால் பூமி ஒவ்வொரு நாளும் ஒரு நொடியில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு தாமதமாக சுழல்கிறது. சுழற்சியில் ஏற்படும் தாமதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு ஜுன் 30ல் ஒரு விநாடி நேரத்தை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.
அதாவது, ஜுன் 30ம் தேதி நள்ளிரவு 11:59:59 க்கு கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு, சர்வதேச நேரம் 11:59:60 என்று இருக்கும். வழக்கமான ஒவ்வொரு நாளுக்கும் உள்ள 86,400 விநாடிகளுக்குப் பதிலாக ஜுன் 30ல் மட்டும் மொத்தம் 86,401 விநாடிகள் கணக்கில் கொள்ளப்படும்.
சென்ற முறை லீப் விநாடி சர்வதேச நேரத்துடன் சேர்க்கப்பட்ட போது பல சாப்ட்வேர் நிறுவனங்கள் பிரச்சனைகளை சந்தித்தன. பெரும்பாலான நிறுவனங்கள் ஜாவா மொழியில் எழுதப்பட்ட நிரல்களில் பிரச்சனைகள் எழுந்ததாக தெரிவித்தன.
இதற்கு முன் 1972ல் தான் முதன் முதலாக லீப் விநாடி சேர்க்கப்பட்டது. இந்த ஆண்டு 26 வது முறையாக வரும் ஜுன் 30ம் தேதி நள்ளிரவு ஒரு லீப் விநாடி சேர்க்கப்படுகிறது.

Comments
Post a Comment