வெள்ளி திரை விமர்சனம் - இனிமே இப்படித்தான்

நடிகர் :சந்தானம் நடிகை :ஆஷ்னா சவேரி இயக்குனர் :முருகானந்த் இசை :சந்தோஷ் குமார் தயாநிதி ஒளிப்பதிவு :கோபி ஜெகதீஸ்வரனின்
கதாநாயகன்–கதாநாயகி: சந்தானம், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர்.
டைரக்ஷன்: முருகானந்த்.
கதையின் கரு: 2 கதாநாயகிகளுடன் சிக்கும் கதாநாயகன்.
நரேன்–ஸ்ரீரஞ்சனி தம்பதியின் ஒரே மகன் சந்தானம். இவருக்கு மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும்...இல்லையென்றால், நான்கு வருடங்களுக்கு திருமணம் நடக்காது என்கிறார், ஜோதிடர். சந்தானமோ காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஒரு தப்பான புரிதல் சந்தர்ப்பத்தில், இவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார், ஆஸ்னா சவேரி. அந்த ஒரே சந்திப்பில் ஆஸ்னா மீது சந்தானத்துக்கு காதல் வருகிறது. விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவரை ஆஸ்னா துரத்தி அடிக்கிறார். ‘‘உன் மீது எனக்கு காதல் வராது’’ என்கிறார்.
இந்த நிலையில், சந்தானத்துக்கு பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். அவருடைய விருப்பம் இல்லாமலே அகிலா கிஷோருடன் நிச்சயமாகிறது. அடுத்த நாளே சந்தானத்தின் காதலை ஆஸ்னா ஏற்றுக்கொள்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஊர் சுற்றுகிறார். இன்னொரு பக்கம் அவருக்கும், அகிலா கிஷோருக்கும் திருமண பத்திரிகை அச்சடிக்கிறார்கள். சந்தானம் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
சந்தானம் தனக்கு பொருத்தமான கதையையும், கதாபாத்திரத்தையும் சரியாக தேர்வு செய்து நடித்து இருக்கிறார். அவருடைய வசன காமெடி, ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்க வைக்கிறது. உதாரணம், ‘‘மரத்தைப் பார்த்தால், மாங்காய் எப்படியிருக்கும்ன்னு சொல்லிடலாம்...’’
வி.டி.வி.கணேஷ், தம்பிராமய்யா ஆகிய இருவருடனும் சேர்ந்து சந்தானம் செய்யும் ரகளைகள், தியேட்டரை உற்சாகமாக வைத்திருக்கிறது. குறிப்பாக, சந்தானமும், தம்பிராமய்யாவும் சேர்ந்து பெப்சி விஜயனை சந்திக்கும் காட்சியிலும், ஓட்டலுக்குள் ஒரே நேரத்தில் அகிலா கிஷோர், ஆஸ்னா ஆகிய இருவருடனும் சந்தானம் மாட்டிக்கொள்கிற காட்சியிலும், அதிர்கிறது.
‘மினி ஐஸ்வர்யாராய்’ என்று சொல்கிற மாதிரி, ஆஸ்னா சவேரி. எல்லா காட்சிகளிலும் தோழிகள் சகிதம் நடக்கிறார். கனவு பாடல் காட்சிகளில், உள்ளாடை தெரிய ஆடுகிறார். அகிலா கிஷோர், நயன்தாராவை ‘ஜெராக்ஸ்’ எடுத்த மாதிரி தெரிகிறார். இவருக்கு நடிக்க தெரிந்த அளவுக்கு நடனம் ஆட தெரியவில்லை.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ‘ஹிட்’ கொடுக்க வேண்டும் என்று ரொம்பவே முயற்சித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, பளிச். இரண்டு கதாநாயகிகள் இடையே ஒரு கதாநாயகன் சிக்கினால்...? என்ற ஒரு வரி கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி, ரசிக்கிற மாதிரி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் முருகானந்த்.
‘‘இனிமே இப்படித்தான்...’’ என்ற பாடல் காட்சியும், சந்தானம் குடித்துக் கொண்டே ஆடுகிற கடைசி பாடல் காட்சியும், வேக தடைகள். ‘கிளைமாக்ஸ்,’ எதிர்பாராதது.
Share from www.dailythanthi.com

Comments
Post a Comment