தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்

தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை முறையாக சென்றடைகிறதா, பயன்பெறும் மாணவ, மாணவியர் யார் போன்ற விரிவான விவரங்கள் கல்வித்துறையால் கணக்கெடுக்கப்படுகிறன.
இந்த பணி தமிழக அரசின் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு அடிப்படையில் நடந்துள்ளது. இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள் 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள், http:/emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இந்த இணையதள தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆனால் கல்வித்துறையினருக்கு மட்டும் தனி நுழைவு ஐ.டி., வழங்கப்பட்டு தகவல்களை பதிவேற்றி வருகின்றனர்.
இந்த திட்டத்தில் 2011, 2012 மற்றும், 2013ம் கல்வி ஆண்டுகளின் விவரங்கள் சேகரிக்கப்
பட்டுள்ளன. இந்த விவரங்களை பள்ளிகளின் பதிவேடு விவரங்களுடன் கல்வி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்ததில் பள்ளிகளில் போலியான மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
கண்டறியப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் குறிப்பாக அரசு உதவிபெறும்
குறிப்பிட்ட பள்ளிகளில் இரண்டு லட்சம் போலி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய
வந்துள்ளது.
கணினி தகவல் மற்றும் பள்ளிகளின் பதிவேடு தகவல்களை ஒப்பிட்டதில் இரண்டு விதமான மாணவர் எண்ணிக்கை கிடைத்துள்ளது.இதனால் அனைத்து பள்ளிகளிலும் பதிவேட்டின் படி
மாணவர்கள் இருந்தனரா, இருக்கின்றனரா என நேரடி ஆய்வு நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்கப் பள்ளிகள் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வருகைப் பதிவேடு மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை, உண்மையில் அரசின் இலவசத் திட்டங்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment