பி.எஸ்.சி நர்சிங் அட்மிஷன் 2015
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஜூன் 26 முதல் விண்ணப்ப விநியோகம்!
மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 26ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.
டிப்ளமோ, நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) பி.பார்ம் (லேட்ரல் என்டரி) ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி வரை பெறலாம். ஜூலை 9-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
கூடுதல் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Comments
Post a Comment