இனஜினியரிங் கவுன்சிலிங் 2015
தொழிற்கல்வி பிரிவினருக்கான இன்ஜி., கவுன்சிலிங்; ஜூன் 15 ல் அறிவிப்பு
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை.
இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ”தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை. வரும், 15ம் தேதி, ’ரேண்டம்’ எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,” என்றார்.
அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில், 100 இடங்கள் ஒதுக்கப்படும். தனியார் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில், 4 சதவீதம் ஒதுக்கப்படும்.

Comments
Post a Comment