200 கோடியில் பாகுபலி
350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாகுபலி:
தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி சில வருடங்களுக்கு முன் இயக்கிய நான் ஈ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்தப்படத்துக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலிக்கு இந்திய அளவில் கவனஈர்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த பேரும் புகழையும் தக்க வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செலவு பண்ணாத மிகப்பெரிய பட்ஜெட்டில் பாகுபலி என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.
வரலாற்றுப் பின்னணியில் நிகழும் கதை அம்சம் கொண்ட படமாக ஆரம்பிக்கப்பட்ட பாகுபலி படத்துக்கு பிரம்மாண்ட செட்களும், கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் தேவைப்பட்டன. அதற்கான செலவுத் தொகையை கணக்குப்போட்டபோது பாகுபலி படத்தை இரண்டு படமாக... அதாவது இரண்டு பாகங்களாக எடுத்தால்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தனர்.
அதன்படி தற்போது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது பாகுபலி படம்.இதுவரை 350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது முதல் பாகத்துக்கான முழுப்படமும் தயார். அதோடு இரண்டாம்பாகத்துக்கான 40 சதவிகித படமும் தயாராகிவிட்டதாம். இன்னும் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் இரண்டாம் பாகமும் முழுமையடைந்துவிடுமாம். அடுத்த மாதம் பாகுபலி படம் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டாம்பாகத்துக்கான படப்பிடிப்பைத் தொடர உள்ளனர்.

Comments
Post a Comment