பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: செயலர் விளக்கம்

பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக விண்ணப்பித்தோர் 'புரவிஷனல்' சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம்; கலந்தாய்வுக்கு வரும் போது கொண்டு வந்தால் போதும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., மற்றும் பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் மே 13ல் துவங்கியது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 9- கடைசி நாள். ஜூன் 20க்கு மேல் கலந்தாய்வு துவங்கும்.டிப்ளமோவை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் கடைசி இரண்டு பருவத் தேர்வுகளின்படி 'கட்- ஆப்' மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு, ஆறு பருவத் தேர்வு முடிவுகளின்படி 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.மே 30ல் டிப்ளமோ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் மதிப்பெண் பட்டியல் 'ஆன்லைன்' ல் வெளியிடப்பட்டது.
'மாணவர்கள் பி.இ., படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 'புரவிஷனல்' சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலிடெக்னிக் சார்பில் அவர்களுக்கு மதிப்பெண் மற்றும் 'புரவிஷனல்' சான்றிதழ் வழங்க ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். இதனால் எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற குழப்பம்
நிலவுகிறது.
இதுகுறித்து இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா கூறியதாவது:
தற்போது பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், மதிப்பெண் மற்றும் 'புரவிஷனல்' சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம். 'ஆன்-லைன்' மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்து விண்ணப்பத்தை ஜூன் 9க்குள் அனுப்பலாம். 'புரவிஷனல்' மற்றும் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டு வந்தால் போதும் என்றார்.

Comments
Post a Comment