+2 துணைத்தேர்வு தட்கல் 2015
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நாளை முதல்.விண்ணப்பிக்கலாம்
🌷பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுத தட்கல் முறையில் நாளையும், 5ம் தேதியும் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2015 ஜூன், ஜூலையில் நடக்கவுள்ள பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) நாளையும், நாளை மறுதினமும் (ஜூன்4, 5) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மார்ச் 2015 பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராக எழுதியிருக்க வேண்டும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத அனைத்து பாடங்களையும் எழுதலாம். தட்கல் முறையில் சென்னையில் மட்டுமே தேர்வெழுத முடியும். விண்ணப்பதாரர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூன் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில் பதிவு செய்ய வேண்டும். மார்ச் 2015 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விண்ணப்பம் பதிவு செய்யும்போது காண்பிக்க வேண்டும். ஒரு பாடத்திற்கு ரூ.50, இதரக்கட்டணம் ரூ.35, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000, பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment