கண் தானத்துக்கு '104'
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கண் தானத்துக்கு '104'ஐ அழைத்தால் போதும்:டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்
🍎🍎🍎🍎🍎🍎🍎
தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும் '104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் அதுபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம்பற்றி மறந்து விடுகின்றனர்.இது போன்றோருக்கு உதவுவதற்காக தமிழக சுகாதாரத் திட்ட செயல்பாட்டில் உள்ள தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை தரும் '104' எண்ணை அழைத்தால் போதும். கண் தானம் பெற மருத்துவர்கள் குழு வீடு தேடி வரும்; இந்த சேவை சோதனை ரீதியாகதுவக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேவை மையத்தின் விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
ஒருவர் இறந்ததும் குடும்பத்தினர் கண் தானம் செய்ய விரும்பினாலும் உடனடியாக யாரை அணுகுவது என தெரிவதில்லை; அதற்காகவே '104'ல் இந்த சேவை துவக்கப்பட்டு உள்ளது.தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள கண் வங்கிக்கு தகவல் தருவோம்; சிறிது நேரத்தில் மருத்துவக் குழு அங்கு வந்து சேரும்; 20 நிமிடங்களில் கண் தானம்பெறும் நடைமுறை முடிந்து விடும்.கண் அகற்றிய அடையாளம் ஏதும் தெரியாது; இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்; இந்த சேவைக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
* டாக்டர்கள் வரும் வரை கண் ஈரப்பதத்துடன் இருக்க பஞ்சில் தண்ணீர் தொட்டுஒத்தடம் தரலாம்; வீட்டில் கண்ணிற்கு போடும் சொட்டு மருந்து இருந்தால் போட்டுவைக்கலாம்.
* 'ஏசி' இருந்தால் பயன்படுத்தலாம்; கண்டிப்பாக இறந்தவர் உடல் உள்ள இடத்தில் மின்விசிறியை இயக்கக் கூடாது.
* ரத்த அழுத்தம் கண்புரை நீக்கு அறுவைச் சிகிச்சை செய்தோரும் நீரிழிவு நோய் பாதிப்புள்ளோரும் கண் தானம் தரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
🌷🌷🌷🌹🌹🌹

Comments
Post a Comment