பென்சன் திட்டம்
SBI, IB, LIC, MORE BANK AND INSURANCE FOLLOW THIS ONE
நாளை தொடங்கப்படும் பென்சன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்ய வேண்டும்.ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆண்டு தோறும் ரூ.12 பிரிமியம் செலுத்தி வந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் செயல் இழப்பும் இதில் அடங்கும்.அடுத்து 18 முதல் 50 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரலாம். இதற்கு ஆண்டு தோறும் ரூ.330 பிரிமியம் செலுத்த வேண்டும். இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஓய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் இந்த 3 திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்.இந்த திட்டத்துக்கான படிவத்தை பெற்று நிரப்பிக் கொடுத்து திட்டத்தில் சேரலாம். இதற்கான முகாம்களும் நடைபெற உள்ளன.இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment