இந்தியாவை அவமதித்தாரா மோடி ?
சீனாவின் ஷாங்காய் மற்றும் தென் கொரிய தலைநகர் சியோலில், பிரதமர் மோடியின் பேச்சு இந்தியாவை அவமதிப்பது போல் இருந்ததாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் உருவாக்கப்பட்ட ஹாஸ்டாக்கில், சுமார் 85 ஆயிரம் பேர் டுவிட் செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, ஷாங்காய் நகரில் பேசிய பிரதமர் மோடி, "முன்பெல்லாம் இந்தியர்கள் என கூறிக்கொள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அவமானமாக கருதினர். தற்போது, இந்தியர்கள் என கூறுவதில் பெருமைப்படுகின்றனர். கடந்த ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும் என, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.” என கூறினார்.
நேற்று தென்கொரிய தலைநகர் சியோலில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த காலங்களில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை, நாங்கள் இந்தியாவில் பிறந்துவிட்டோம் என பலர் நினைத்தார்கள். இது எந்த நாட்டிலும், எந்த அரசிலும் நடந்திருந்தால் நாம் வெளியேறியிருப்போம்.” என கூறினார்.
இந்த இரண்டு பேச்சுக்களும், வெளிநாட்டு பயணத்தின் போது, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
பிரதமரின் பேச்சு குறித்து டுவிட்டரில் உருவாக்கப்பட்ட ஹாஸ்டாக், உலகளவில் இரண்டாமிடம் பிடித்தது. இந்தியன் என பெருமைப்படும் பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்து எந்த சாதனையும் படைக்கவில்லை எனவும் ட்வீட்டரில் பலர் கருத்து பதிவு செய்திருந்தனர்.
Comments
Post a Comment