வெல்டர் வெயிட் சாம்பியன்
குத்தினார் கொட்டியது 1143கோடி
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த 'வெல்டர் வெயிட்' உலக குத்துச்சண்டையில் அமெரிக்க வீரர் பிளாய்டு மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார். பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ ஏமாற்றம் அடைந்தார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 'வெல்டர் வெயிட்' உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் அமெரிக்காவின் பிளாய்டு மேவெதர், பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ மோதினர். விறுவிறுப்பான போட்டியில் மேவெதர் ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட மேவெதர், மொத்தம் 12 ரவுண்டுகள் முடிவில் 118-110, 116-112, 116-112 என வெற்றி பெற்றார்.
ரூ.1143 கோடி: இதன் மூலம், பட்டத்திற்கான 'பெல்ட்டுடன்' பரிசுத்தொகையாக ரூ. 1,143 கோடி வென்றார். மொத்தம் பங்கேற்ற 48 'வெல்டர் வெயிட்' சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்று மேவெதர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்.
கடவுளுக்கு நன்றி: வெற்றி குறித்து மேவெதர் கூறுகையில்,'' உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி. உலகம் முழுவதும் வந்து போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி. பாக்குயாவோ கடுமையான சவால் தந்தார். இதனால்தான், இவர் இன்னும் குத்துச்சண்டை போட்டியின் உச்சத்தில் உள்ளார்,''
கடுமையான போட்டி: தோல்வி அடைந்த பாக்குயாவோ கூறுகையில்,'' போட்டி கடுமையானதாக இருந்தது. இருப்பினும், நான் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால், மேவெதர் ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல், நகர்ந்து கொண்டே இருந்ததால் தாக்க முடியவில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிராளியை தாக்குவது அவ்வளவு எளிதானது இல்லை,'' என்றார்.
Comments
Post a Comment