வெள்ளி திரை விமர்சனம் - டிமாண்டி காலனி
வெள்ளி திரை விமர்சனம் - டிமாண்டி காலனி
தமிழ் சினிமாவில் வாரத்திற்கு இரண்டு பேய் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் வித்தியாசமான திகில் படமாக வெளியாகியிருக்கும் படம் தான் 'டிமாண்டி காலனி'.
சென்னையின் முக்கிய பகுதி ஒன்றில், ஒரு பேய் பங்களா. அதில், டிமாண்டி என்ற ஒரு வெள்ளைக்கார துரையின் ஆவி பல ஆண்டுகளாக இருப்பதாகவும், அந்த பங்களாவுக்குள் சென்றவர்கள் அனைவரும், மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் அந்த வெள்ளைக்கார துரை அங்கு பேயாக சுற்றுகிறார் என்பதற்கு ஒரு பிளாஸ் பேக்.
இதற்கிடையில், அந்த பங்களாவைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் நாயகன் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் அந்த பங்களாவுக்குள் செல்கிறார்கள். மேலும், அங்குள்ள ஒரு தங்க நகையும் எடுத்துக்கொண்டு வர, அவர்களை பின்தொடரும் டிமாண்டி, அவர்கள் வீட்டில் வைத்தே அவர்களை உருட்டி பொரட்டி எடுக்கிறார். விஷயம் அறியாத அருள்நிதியும் அவரது நண்பர்களும், அந்த டிமாண்டி ஆவியிடம் இருந்து தப்பித்தார்களா அல்லது பலியானார்களா? என்பதை வித்தியாசமான திகில் அனுபவமாக சொல்லியிருக்கிறார்கள்.
அருள்நிதி, ஹீரோவாக ஜெயிப்பதைக் காட்டிலும் தான் நடிக்கும் படங்கள் ஜெயிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் கதைகளை தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் இப்படத்தில், ஹீரோவாக இன்றி, ஒரு கதாபாத்திரமாக நடிப்பில் சக்கை போடுபோடுகிறார்.
அருள்நிதியின் நண்பர்களாக நடித்துள்ள ரமேஷ் திலக், சனத், அபிஷேக் ஜோசப் ஆகியோரும் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்கள்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது, என்பது தான் திகில் படங்களில் ஹைலைட். ஆனால், அந்த விஷயத்தை முன்பே விவரித்து விடும் இயக்குனர், அது எப்படி நடக்கிறது, என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மிரட்டுகிறது.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஒரு சிறிய அறையினுள்ளே நடந்தாலும், அதை பல கோணங்களில் காட்டி படம் பார்ப்பவர்களை மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், அவருடன் மேலும் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது பின்னணி இசை.
படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசனின் பணி படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. அதிலும் ஆவி குறித்த பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் எபிசோட்டில் புவனின் கத்திரி கச்சிதமாக கட் பண்ணியிருக்கிறது.
உருவத்தைக் காட்டி திகிலடையச் செய்யும் ரெகுலர் திகில் பட பார்மாட்டை கடைபிடிக்காமல், நடிகர்களின் ரியாக்ஷன், பின்னணி இசை, அறையில் உள்ள பொருட்கள், என்று இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து திகிலை வேறு ஒரு கோணத்தில் கொடுத்தது மட்டும் இன்றி, அதிகப்படியான அனிமேஷன் காட்சிகள் இல்லாமல், வித்தியாசமான திரைக்கதை மூலம் தான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.
திகில் படங்களை ரசிக்கும் அத்தனை ரசிகர்களுக்கும் 'டிமாண்டி காலனி' ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Comments
Post a Comment