ஓராண்டு மோடி ஆட்சிக்கு மார்க்
புதுடில்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் பாஜ கட்சி, ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு முடிகிறது. ஒரு ஆண்டில் மோடி அரசு சாதித்தது என்ன, சோதித்தது என்ன என்று பல்வேறு வாத பிரதிவாதங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இதில் "மீடியா'க்களும்'' தங்கள் பங்குக்கு தனித்தனியே "சர்வே' நடத்தி, மோடி அரசுக்கு மார்க் அளித்துள்ளன. இதில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் 77.5 சதவீத மார்க் அளிக்கப்பட்டுள்ளது.
அப்பத்திரிகை கூறியிருப்பதாவது:
செயல்பாட்டு அடிப்படையில் நாங்கள் மோடி அரசுக்கு 77.5 சதவீத மார்க் அளித்துள்ளோம். உண்மையில் இது நல்ல மார்க் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அரசின் ஆரம்பம் நன்றாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த ஆரம்பத்தை தொடர்ந்து செயல்பாட்டுக்கு வர வேண்டியது அரசின் பொறுப்பு.
உதாரணமாக, இளைஞர்களின் திறன்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவானால் தான் இதை நம்ப முடியும்.
சில சங்பரிவார் தலைவர்கள், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக பேசுவதை கண்டிக்கிறார். இதே போல, நாட்டின் ஒற்றுமைக்கு ஏற்படும் குந்தகங்களை அவர் தடுக்க வேண்டும்.
முக்கிய சாதனைகளுக்கு கொடுக்கப்பட்ட மார்க்:
1. தலைமைப் பண்பை நிலைநிறுத்தி, நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தியது - 9
2. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தது; வர்த்தகம் செய்ய ஏற்ற சூழ்நிலைமை உருவாக்கியது - 7.5
3. ஊழலை கட்டுப்படுத்தி, கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தது - 9
4. வெளிநாடுகளில் இந்தியாவின் இமேஜை உயர்த்தியது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஆதரவாக பயன்படுத்தியது - 9
5. மருத்துவம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பது - 6.5
6. நிதி ஸ்திரத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்தியது - 8
7. மாநிலங்களுக்கு இடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தியது - 8
8. ராணுவத்தை வலுப்படுத்தியது - 8
9. சிரமத்தில் இருக்கும் வேளாண்மை துறையை மீண்டும் கவனிக்கத் தொடங்கியது - 5.5
10. அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்தது - 7
ஆக மொத்தம் 77.5/100
இது தான் டைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்த மதிப்பெண்.
ஐபிஎன்:
சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி பார்வையாளர்கள், மோடி அரசுக்கு 72 சதவீத மதிப்பெண் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது.
இந்தியா டுடே:
இந்தியா டுடே பத்திரிகை நடத்திய சர்வேயில், 56 சதவீத வாசகர்கள், மோடி அரசு நன்கு செயல்படுவதாக மதிப்பெண் கொடுத்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட பாதிப்பேர், மோடி அரசை ரசிக்கவில்லை என அர்த்தம்.
Comments
Post a Comment