கேன்ஸ் பட விழா
ஈழத்தமிழர்களின் படமான தீபனுக்கு கேன்ஸ் பட விழாவில் உயரிய விருது!
ஆஸ்கர் விருதுக்கு பிறகு உலகளவில் கொண்டாடப்படும் ஒரு திரை விழா. கேன்ஸ் திரைப்பட விழா. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விருதில் உலகம் முழுவதிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா, மே 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு படங்கள் விருதுகளை குவித்தன. இந்திய படமான மாஸான் படத்திற்கும் விருது கிடைத்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரின் அவல நிலையை சொல்லியுள்ள தீபன் என்ற படத்திற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப்பனை விருது கிடைத்துள்ளது. இலங்கை தமிழரின் வாழ்க்கையை சரியான முறையில் பிரதிபலித்த படம் இது. இப்படத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜக்குவாஸ் ஓடியேட் இயக்கியிருந்தார்.
பிரான்ஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்த ஒரு ஆண், பெண் மற்றும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை கண்ணீர் மற்றும் வலிகளுடன் சொல்லியிருந்தார் இயக்குநர் ஜக்குவாஸ்.

Comments
Post a Comment