மெசஞ்சர் விண்கலம்
வியாழன் அன்று புதனை அடைந்தது மெசஞ்சர்: பயணம் வெற்றி
வாஷிங்டன்: புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'நாசா' வால் அனுப்பி வைக்கப்பட்ட மெசஞ்சர் விண்கலம், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்.30 (வியாழன்) அன்று பணியை நிறைவு செய்துள்ளது.
பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் குறித்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல கிரகங்களுக்கு விண்கலங்களை அது அனுப்பி உள்ளது. இந்த வகையில் புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது தான் மெசஞ்சர் விண்கலம். இந்த விண்கலம், புதன் கிரகத்தை பற்றி புதிய தகவல்களை திரட்டி, நாசாவிற்கு கொடுத்துள்ளது.
வெப்ப கிரகம்:
அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகத்தில், பொட்டாசியம், சல்பர் ஆகியவை அதிகமாக உள்ளதாகவும், அங்கு நிலவும் 167 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக அவை வாயு வடிவத்தில் அங்கு சேர்ந்திருப்பதாகவும் மெசஞ்சர் கண்டறிந்துள்ளது. இக்கிரகத்தில் சூரிய ஒளிபடாத பரப்புக்களும் உள்ளன. அங்கெல்லாம் ஐஸ் கட்டி படிமானங்கள் உள்ளதை மெசஞ்சர் கண்டுபிடித்துள்ளது. மேலும் இரும்பு தாதுக்களும் அதிக அளவில் புதன் கிரகத்தில் உள்ளதும் மெசஞ்சர் மூலம் தெரிய வந்துள்ளது.
முட்டி மோதியது:
இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர் சீன் சாலமன் கூறுகையில், 'மெசஞ்சர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் புதன் கிரகத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். அதற்கான ஆய்வு நடந்து கொண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தனது பயணத்தின் நிறைவாக, புதன் கிரகத்தின் மீது மெசஞ்சர் விண்கலம் மோதி சிதறியது. இந்த மோதலின் மூலம், புதன் கிரகத்தின் தரைப்பகுதி குறித்து பல தகவல்கள் நாசாவிற்கு கிடைத்துள்ளன.
அடுத்த ஆய்வு:
புதன் கிரக ஆய்வு குறித்து, மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான விஞ்ஞானி டேபோரா டேமின்ங் கூறுகையில், 'மெசஞ்சரின் புதன் கிரக ஆய்வுப் பயணம் திருப்தியளிக்கிறது,' என்று கூறி உள்ளார். இந்நிலையில், புதன் கிரகம் குறித்து மேலும் ஆய்வு நடத்த ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் வரும் 2017ம் ஆண்டு மீண்டும் ஒரு விண்கலம், புதனை ஆய்வு செய்வதற்காக பயணிக்க உள்ளது. இந்த நடவடிக்கைக்கு 'பெபிகொழும்போ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment