கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை2015
மே 17ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்
பதிவு செய்த நாள்: மே 17,2015 12:23
எழுத்தின் அளவு:
நேரடி விண்ணப்ப வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்களை பெற முடியும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, திருவள்ளூர், ஓசூர், மாதவரம் என ஏழு இடங்களில் உள்ள கல்லூரிகளில், கால்நடை மருத்துவ படிப்பான பி.வி.எஸ்சி. மற்றும் அதை சார்ந்த படிப்புகள் உள்ளன.
கால்நடை மருத்துவத்திற்கு 280; உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழி இன ஆராய்ச்சி தொழில்நுட்ப பிரிவுகளில் தலா 20 என, 60 இடங்கள் உள்ளன. மொத்தம் 340 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பம், வழக்கமாக நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 17ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும்.
for online apply click here
Comments
Post a Comment