ப்ளஸ் 2 ரிசல்ட் 2015 விவரம்
பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை
சென்னை : பிளஸ் -2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது வழக்கம் போல் மாணவிகளே முதலிடத்தை பிடித்துள்ளனர்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இணையதளங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4 பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்
முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்:
செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள்,
நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர்
பிளஸ் 2 தேர்வு :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.
இணையதள முகவரிகள் :
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தவிர மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுகூட்டல் விண்ணப்பம் :
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 8 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 14 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக மே 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment