குரூப் 2-2015
1241 இடங்களுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.
மொத்தம் 1241 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவி வணிகவரி அதிகாரி, துணை பதிவாளர்(Grade II), தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஜுனியர் வேலைவாய்ப்பு அதிகாரி, கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு இத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணிநிலையிலும், பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட சம்பள விகிதங்கள் உண்டு.
இத்தேர்வை எழுத விரும்புவோர், குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு விதிமுறைகள் உண்டு.
முதல்நிலைத் தேர்வு, மெயின்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, பல கட்டங்களாக இத்தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி - மே 29.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி - ஜுன் 1
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி - ஜுன் 26.
தேர்வுநேரம் - காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை.
விரிவான அனைத்து தகவல்களுக்கும்
http://www.tnpsc.gov.in/notifications/7_2015_not_eng_csse_ii_new.pdf
Comments
Post a Comment