🌻🌻🌻🌻🌻🌻🌻 சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. l மாநில கல்வித் துறையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கு, மொழிப்பாடம் அல்லாத முக்கியப் பாடங்களின் மதிப்பெண் மட்டும், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது. l சமச்சீர் கல்வி முடித்தவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு, மூன்று பாடங்களின் மொத்த மதிப்பெண்ணை, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடுவர். l அதாவது, இன்ஜினியரிங் படிப்புக்கு, கணிதத்தில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, இரண்டால் வகுத்து, 100க்கு எவ்வளவு; இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, நான்கால் வகுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 50 என, இரு பாடங்களுக்கும் ...