part time B.E in tamilnadu
🎄🎄🎄🎄🎄🎄🎄
பகுதிநேர பொறியியல்
படிப்பு - விண்ணப்பம் குறித்த விவரம்...
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🌺 அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013
🌺. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636 011
🍇அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627 007
🍇அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004
🌺 தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் 632 002
🍇அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635 104
🌺 பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 004
🌺கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641 014
🍇. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625 015
தகுதி
🍀🍀
💐 விண்ணப்பதாரர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய வேண்டும்.
💐. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் சமயம் பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
💐. விண்ணப்பதாரர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதிவு பெற்ற நிறுவனம் / கம்பெனி / தொழிற்சசாலை / கல்வி நிறுவனம் / அரசு / தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம்
🍡🌲🍡🌲🍡🍡🍡🍡
விண்ணப்பதாரர் பணிபுரியும் இடம் விண்ணப்பிக்கும் கல்லூரியிலிருந்து 120 கி.மீ. தொலைவிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கு www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.
இந்த இணையதள வழியாக இரு வகைகளில் விண்ணப்பிப்பதற்கு வழிமுறைகள் உள்ளன
🌺. offline mode – விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பும் முறை.
🌺 online mode – இணையதள வழியாக நேரிடையாக விவரங்களை பதிவு செய்து அதனை பிரதி எடுத்து உரிய ஆவணங்களுடன் அனுப்பும் முறை.
offline mode-ல் விண்ணப்பிப்பவர்கள் தேவைப்பட்டால் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் விண்ணப்பத்தினை ரூ.50/- செலுத்தி பதவிறக்க நகலை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் நாள்
விண்ணப்பப் படிவம் (offline/online)www.ptbe-tnea.com இணையதள முகவரியில் 28.4.2015 முதல் 8.5.2015 மாலை 4.00 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.
பதிவுக் கட்டணம் விண்ணப்பதாரர் ரூ.300/- (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.150/-)க்கான கேட்வு வரைவோலையினை (27.4.2015-க்கு முன்னர் பெற்றிருக்கக் கூடாது.) “The Secretary, Part time B.E. / B.Tech. Admissions, Coimbatore” என்ற பெயரில் பெற்று பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவுக் கட்டணத்திற்கான கேட்பு வரைவோலையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்படும்.
🌺 பொது மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com இணையதள முகவரியில் INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES”பக்கத்தில் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவுக் கட்டணத்துடன் கீழ்க்காணும் முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்:8.5.2015, மாலை 5.00 மணி.
Comments
Post a Comment