ஐ.பி.எல் in சென்னை
ஐ.பி.எல். போட்டி: சென்னையில் 6–ந்தேதி டிக்கெட் விற்பனை
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9–ந்தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் (இரவு 8 மணி), 11–ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனும் (மாலை 4 மணி), 25–ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் (இரவு 8 மணி), 28–ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்சுடனும் (இரவு 8 மணிக்கு), மே 4–ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் (மாலை 4 மணி), மே 8–ந்தேதி மும்பை இந்தியன்சுடனும் (இரவு 8 மணி), மே 10–ந்தேதி ராஜஸ்தானுடனும் (இரவு 8 மணி) சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிக்கான (9 மற்றும் 11–ந்தேதி ஆட்டம்) டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
இதற்கிடையே சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. in.bookmyshow.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.
ஆன்லைனில் ரூ.1,500 (சி.டி,இ,எப்,ஜி மற்றும் எச் ஸ்டாண்டு மேல்பகுதி), ரூ.2,500 (டி3), ரூ.3 ஆயிரம் (சி,டி,இ ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் லெவல் 3 மற்றும் எச் பாக்ஸ் லெவல் 2), ரூ.4 ஆயிரம் (பெவிலியன் டெரஸ் மற்றும் டெரஸ் 2), ரூ.6 ஆயிரம் (அண்ணா பெவிலியன்) ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடுவதற்காக தடை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்க இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவிடம் தெரிவித்துவிட்டது.
மேத்யூஸ் (டெல்லி), பெரைரா (பஞ்சாப்), மலிங்கா (மும்பை) ஆகிய 3 இலங்கை வீரர்கள் இந்த முறை ஐ.பி.எல். தொடரில் ஆடுகிறார்கள். அவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாட முடியாது.
"
Comments
Post a Comment