CENTRAL UNIVERSITY - THIRUVARUR
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2015-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன்.6,7 ஆகியத் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பொன். ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் 8 மத்திய பல்கலைக் கழகங்க ள் இணைந்து இப்பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.
ஜூன்.6,7 -ல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட இந்தியாவில் 39 மையங்களில் நடைபெற பொது நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ண ப்பத்தை மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 5-ம் தேதி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்பிப்பவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையெழுத்து, மாணவரின் மதிப்பெண் விழுக்காடு ஆகியவற்றை இணையத்தில் விண்ணப் பிக்கும் போது அளிக்க வேண்டும். விண்ணப்பம் கட்டணம் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பிளஸ்-2 முடித்தவர்கள் ஒருங்கிணைந் த 5 ஆண்டு படிப்பு எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வாழ்க் கை அறிவியல் பாட பிரிவுகளிலும், இளநிலை முடித்தவர்கள் முதுகலை ஆங்கிலம், செம் மொழி தமிழ், ஹிந்தி, சமூகப்பணி, ஊடகம் மற்றும் தொடர்பியல் பாடப்பிரிவுகளில் சேர லாம்.
மேலும் நிகழாண்டு எம்.டெக் மெட்டீரியல் அறிவியல் மற்றும் நானோ டெக்னாலஜி, எனர் ஜி மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்க ள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம், செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த விவரங்களை www.cucet2015.co.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும். மேலும் தகவல் களுக்கு பல்கலைக்கழக துணைப் பதிவாளரை 04366-277261, 9489054270 தொலைபேசியிலும் cucet2015@cutn.ac.in. என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி நாளிதழ்
Comments
Post a Comment