BREAKING NEWS
நில நடுக்கம்
இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கம் எதிரொலியாக டில்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் கடும் அதிர்வும் , கட்டடங்கள் குலுங்கியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த உணர்வு 20 நிமிடங்கள் வரை இருந்ததாக இப்பகுதியினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் குறிப்பாக நந்தனம், கோடம்பாக்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பலரும் வீதிகளுக்கு வந்தனர். இதனால் பலரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
நில நடுக்கம் காரணமாக டில்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரிலும் நேபாளத்திலும் மொபைல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
Comments
Post a Comment