செம்மர மர்மம்
துப்பாக்கிச் சூடு - சந்தேகங்கள்
---------------------------------------------------
மரம்வெட்டும் இடத்திற்கு சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் எப்படி வந்தார்கள் ?
அவர்கள் காவல்துறையில் இருந்து தப்பி வந்தார்களா ?அல்லது காவல்துறையினரே அழைத்து வந்தார்களா?
100 பேர் மரம் கடத்திய இடத்தில் துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட காயம் அடையாதது எப்படி?
மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ?
மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?
கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதியிலேயே துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதன் மர்மம் என்ன?
கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது...
தப்பி ஓடியவர்களின் காலில் இருந்து தவறிய காலணிகள் எங்கே?
கொல்லபட்டவர்களின் அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ?
மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கும் செம்மரங்கள் இல்லை ..!
அப்படி என்றால் அந்த செம்மரங்கள் எங்கு வெட்டப்பட்டவை?
செம்மரக்கடத்தல் கும்பலின் தலைவனும், ஆந்திர அரசியல் பிரமுகருமான கெங்கிரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
செம்மர கடத்தல் கும்பல் தலைவர்களை விட்டுவைத்திருப்பதன் மர்மம் என்ன?
கூலிக்கு ஆசைபட்டு மரம்வெட்டச்சென்ற தமிழக தொழிலாளர்களை சுடுவதற்கான காரணம் என்ன?
Comments
Post a Comment