ஆய்வக உதவியாளர் விண்ணப்பிக்க சேவை மையம்
பணியிடங்களுக்கு ஆன்லைனில் பதிய சேவை மையம்
அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்காக ஆன் - லைனில் (இணையத்தில்) இன்று முதல் பதிய, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில் சேவை மையம் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் உள்ளவர்கள், விண்ணப்ப சேவை மையங்களை அணுக வேண்டுமானால், அதிகபட்சமாக, 80 கி.மீ.,துாரம், பயணம் மேற்கொள்ள வேண்டும் என, அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆய்வக உதவியாளர் பணிக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக கொண்டு, தேர்வு நடத்தப்பட உள்ளது.
179 இடங்களுக்கு...
பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்களுக்கு, வயது உச்ச வரம்பு கிடையாது என்பதால், மாவட்டத்தில், 179 இடங்களுக்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூரில் இரண்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், செங்குன்றத்தில் தலா ஒன்று என, ஆறு இடங்களில் இதற்கான சேவை மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று (ஏப். 24) முதல், மே 6ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு தேர்வுகள், சேவை மையங்களில், ’வெப் கேமரா’ மூலம் புகைப்படத்துடன், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் அவர்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்
Comments
Post a Comment