மகாவீரரின் அருள்மொழிகள்
ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள்
*அதிகாலையில் எழுந்திரு.
*படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.
*கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.
*கடவுளை வணங்கு.
*மந்திரத்தை நினை -ஜபம் செய்.
*காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.
*உடனே குளித்து விடு.
*ஆலயத்திற்கு செல்.
*தெய்வ வழிபாடு செய்.
*பின்னர் உன் தொழிலைக் கவனி.
*தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.
*நியாய முறையில் பொருளைத்தேடு.
*அநியாயத்தை மனத்திலும் கருதாதே.
*உலகத்தோடு ஒத்து வாழ்.
*உன்னைப் போல் மற்றவரையும் நினை.
*எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.
*மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.
*புகழொடு வாழ்.
*பகைவரிடத்திலும் *இனிமையாகப் பேசு.
*எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
*எவரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
*அனைவரிடத்தும் முக மலர்ச்சியுடன் பேசு.
*நல்லவரைப் பின்பற்றுக.
*நல்லவர் சொற் கேள்.
*நல்லவர் போன வழி நீயும் போகுக.
*நல்லோரைக் காண்பதுவும் நன்றே.
*நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.
*பெரியோரிடத்தில் வணக்கமாய் இரு.
*பெரியோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.
*பெரியோர் பேச்சைக் கேள்.
*பெரியோரைக் கண்டால் தாழ்மையுடன் நட
*பெரியோர் வார்த்தையை மீறாதே
*பெரியோர் சொற்படி நட.
*தீயோருடன் சேராதே.
*தீயோர் சொற்களைக் கேட்காதே.
*தீயோருடன் பழகாதே.
*தீயோரைக் கண்டால் தூர நட
*தீயோரைக் காண்பதும் தீதே.
*தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.
*தர்மம் செய்க.
*தர்மத்தைப் பேணிக் காக்க.
*புண்ணியம் செய்க.
*பாபத்தைச் செய்யாதொழிக.
*இறைவனை வழிபடுக.
*குருக்களை வணங்குக.
*அற நூல்களை ஓதுக.
*கொலை செய்யாதே.
*பொய் பேசாதே.
*கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.
*திருடாதே (களவு செய்யாதே).
*ஐம்புலனை அடக்குக.
*பிரம்மசர்ய விரதம் காக்க.
*பொருள்மீது பேராசைப் படாதே.
*பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.
*நீ மனிதனாக இரு.
நீ மனிதனாக வாழ்க.
*விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.
*பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.
*பொறாமைப்படாதே.
*கோபத்தை அடக்குக.
*கர்வங் கொள்ளாதே.
*வஞ்சனை செய்யாதே.
*கபடம் செய்யாதே.
*பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.
*லோபத்தை விடுக.
*அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)
*அபய தானம் செய்.
*கல்விக்கு உதவி செய்.
*பிறர் பிணி நீக்குக.
*பிறர் நலம் கருதுக.
*தன்னலம் கருதாதே.
*பிறரை இகழாதே.
*தற்புகழ்ச்சி செய்யாதே.
*எல்லோரிடத்திலும் நேசமாயிரு.
*எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.
*யாருக்கும் கெடுதி செய்யாதே.
*பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.
*பிறருக்குக் கெடுதி யுண்டாவதைப் பற்றிப் பேசாதே.
*ஊன் உண்ணாதே.
*ஊன் உண்பது மனித இயல்பல்ல.
*ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.
*கள் குடிக்காதே.
*கள் மயக்கத்தைத் தரும்.
*கள் அறிவைக் கெடுக்கும்.
*கள் மனித இயல்பைக் கெடுக்கும்.
*கள்ளைக் கனவிலும் கருதாதே.
*களவையும் கனவில் நினைக்காதே.
*பிறர் பொருளை விரும்பாதே.
*பிறர் மனை நயவாதே.
*சூதாடாதே.
வேசியை நேசிக்காதே.
*விபசாரியை விரும்பாதே.
*குருபத்தினியைக் கருதாதே.
*கன்னியைக் கெடுக்காதே. *குலமாதரைக் கெடுக்காதே.
*மாதாவைத் தெய்வமாக நினை
*செய்ந்நன்றி மறவாதே.
*பித்ரு துரோகம் நினைக்காதே.
*தாயாதி துரோகம் நினைக்காதே.
*அண்டினவரைக் காப்பாற்றுக.
*பிராணிகளை வதைக்காதே.
*பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.
*பிராணிகளை அடிக்காதே.
*பிராணிகளுக்குச் சரியான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.
*காலந் தவறி தீனி வைக்காதே.
*காலந்தவறி தண்ணீர் காட்டாதே.
*வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) *அதிகக் சுமை ஏற்றாதே.
*மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.
*உதவி செய்யாமல் அடிக்காதே.
*பசுங்கன்றுக்குப் பால் விடு.
*பாலை அடியோடு கறக்காதே.
*கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.
*வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.
*உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓரிடத்தில்; புதைத்து விடு.
*பொய்ப் பிரசாரம் செய்யாதே.
*பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.
*உண்மையற்றதை உலகில் பரப்பாதே.
*ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.
*ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. *வெளியிடாமல் இருந்துவிடு.
*பிறர் பொருளை அபகாரிக்காதே.
*உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.
*பிறர் பொருளை அபகரிக்கக் கனவிலும் கருதாதே.
*தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசாரித்து அவருக்குக் கொடுத்து விடு.
*அரசு ஆணையை மீறாதே.
*அரசு சட்டப்படி நட
*அரசுக்கு அடங்கி நட.
*அரசை அவமதிக்காதே.
*அரசு அன்று கொல்லும்.
தெய்வம் நின்று கொல்லும்.
*ராஜா பிரத்யக்ஷ தேவதா.
*பாலில் நீரைக் கலந்து விற்காதே.
*தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.
*அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.
Comments
Post a Comment