கவிஞர் விவேகா... பேட்டி
என்னை நானே புதுப்பித்து கொண்டேன் - விவேகா!
கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில் அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து பிரமாண்டமாய் தயாரித்திருக்கும் படம் ''உத்தம வில்லன்''. கமல் 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டு நடிகர் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களில் 5 பாடல்களை கமலும், ஒரு பாடலை சுப்பு ஆறுமுகமும், மற்றொரு பாடலை விவேகாவும் எழுதியுள்ளனர்.
உத்தம வில்லன் படத்திற்கு பாட்டு எழுதிய அனுபவம் குறித்து விவேகா நம்மிடம் கூறியதாவது, லவ்வா லவ்வா என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். இதன் வரிகளை கமல் தான் தொடங்கி வைத்தார். ஒரு காதலன் காதலியை பார்த்து பாடுவது போன்றும், ஒரு தொண்டன் தலைவனை பார்த்து பாடுவது போன்றும் இந்த பாடல் இருக்கும். உத்தம வில்லன் படத்தில் கமல், சூப்பர் ஸ்டாராக வருகிறார். நீ தொடாத உச்சம் உண்டா... சாதனையில் மிச்சம் உண்டா... போன்ற வரிகளை கமல் மிகவும் ரசித்தார். அவர் ஒரு பல்துறை கலைஞர். கமல் சாரிடம் பாடல் எழுத போனதை விட அவரிடம் கற்று கொண்ட விஷயங்கள் தான் அதிகம். சொல்லப்போனால் அவரால் என்னை நானே புதுப்பித்து கொண்டேன் என்று கூறினார்.
பிரமாண்டமாய் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம், வருகிற மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில் வெளியாக இருக்கிறது.
Comments
Post a Comment