புத்தாண்டு கவிதை
தமிழ் புத்தாண்டு கவிதை..
சித்திரை முதல் நாளாம்
தமிழர்களின் திருநாளாம்
புத்தாண்டு பிறப்பாம்
தமிழ் இனத்தின் சிறப்பாம்
தொன்மை மொழியாம்
பிறமொழிக்கு வழியாம்
காணாது கண்டேன்
கண்டதை உண்டேன்
உண்டதை கொண்டு
சென்றேன் என்று
பிறமொழி கவிஞர்களையும்
கவர்ந்து தமக்குள் பூட்டிபோட்ட
அற்புத மொழியாம்
நம் தமிழ்மொழி..
இந்த நன்னாளில் அனைவரும் நலமுடன் வாழ தமிழ் புத்தாண்டு
பிறக்கட்டும்..பூவுலகம் தழைக்கட்டும்...
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்...-அன்புடன் உங்கள் பஞ்சா..
கவிதை - திரு.பஞ்சாட்சரம், ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம்.
Comments
Post a Comment