விண் மின் நிலையம்
20 ஆண்டுகளில் விண்வெளி மின்நிலையம்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை:
நாகர்கோவில்: இன்னும் 20 ஆண்டுகளில் விண்வெளியில் மின்நிலையம் அமையும் போது, உலகின் மின்பற்றாக்குறை நீங்கி விடும் என்று இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் ராஜீவன் நம்பிக்கை தெரிவித்தார்.
நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மின்னணு மற்றும் சிவில் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தி கிடைக்கிறது. இதனை சாதகமாக்கி அதிக எண்ணிக்கையிலான சூரிய சக்தி செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவி, அவற்றை விண்ணில் ஒருங்கிணைத்து பெரிய விண்வெளி மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இது கடும் சவாலான செயலாக இருந்தாலும், இந்திய விஞ்ஞானிகள் இதை சாதிப்பார்கள். இந்திய விஞ்ஞானிகள் பன்னாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த சாதனையை 20 ஆண்டுகளில் சாதித்து காட்டுவார்கள். விண்வெளி மின்நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது உலகில் மின்சார தட்டுப்பாடு முழுமையாக விலகி விடும். மின் பற்றாக்குறையை போக்குவதில் நமது நாட்டு மாணவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். கற்ற கல்வியை இதற்காக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினா
Comments
Post a Comment