இந்தியா ஏழை நாடு இல்லீங்கோ...!
புதுடில்லி:இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணக்காரர்களின் எண்ணி்கை அதிகரித்து வருவதன் மூலம் பணக்காரர்களின் நாடுகளின் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளதாக நைட் பிராங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவை கூறியிருப்பதாவது: 2014-ம் ஆண்டு கணக்கெடுப் பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் பெரும் பணக்காரர்களின் பெரும் பகுதியினர் மும்பையை சுற்றி வாழ்வதாகவும் இதன் காரணமாகவே மும்பை நிதி தலைநகராக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாது .உலகளவில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6-வது இடத்திலும் உள்ளது.
மும்பையை அடுத்து அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களாக புதுடில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்த்து வருவதும் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது
Comments
Post a Comment