இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம்
என்ன பழங்களில் என்ன இருக்கிறது.
மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.
பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.
மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப்படுத்தும்.
வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.
ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.
திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
எலுமிச்சை: எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது.
பேரீட்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்.
Comments
Post a Comment