கேடி பில்லா கில்லாடி ரங்கா
பி.பி.சி.யை ஏமாற்றி பணம் சம்பாதித்த கில்லாடி
லண்டன்:பி.பி.சி. தொலைக்காட்சி தன் சொந்த நாட்டவர் ஒருவராலே ஏமாற்றப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நதீம் அப்பாசி என்று கூறிய நதீம் ஆலம் என்பவர் தொடர்ந்து பி.பி.சி.யில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துள்ளார். பி.பி.சி. வேர்ல்டு நியூஸ், பி.பி.சி. ஏசியன் நெட்வொர்க் மற்றம் ரேடியோ பைவ் லைவ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ள ஆலம் பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார். பிரிட்டனில் உள்ள ஹட்டர்ஸ்பீல்டில் வசித்து வரும் ஆலம் அந்த ஊர் அணிக்காக மட்டுமே கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்தியாவின் ஆகாஷ் சோப்ராவுடன் இணைந்து கிரிக்கெட் பற்றிய வர்ணனையையும் ஆலம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment