இது பூர்வீகா இல்ல போஸ்ட் ஆபிஸ்
தமிழகத்தில் முதல் முறையாக தபால் அலுவலகத்தில் செல்லிடப்பேசி விற்பனை
தமிழக தபால் துறையில் முதல் முறையாக செல்லிடப்பேசி விற்பனை மதுரையில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
தபால் சார்ந்த சேவைகள் தவிர பல்வேறு வணிக ரீதியிலான சேவைகளையும் தபால் துறை செய்து வருகிறது.
தற்போது செல்லிடப்பேசி விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பான "பென்டா 301' என்ற செல்லிடப்பேசி தபால் நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஊரகப் பகுதி மக்களுக்கு குறைவான விலையில், நவீன வசதிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை விற்பனை செய்யும் நோக்கில் இத்திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்கிறது.
மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த செல்லிடப்பேசி ரூ.1999-க்கு விற்பனை செய்யப்படும்.
காமிரா, எப்எம், இணையதள வசதி, வாட்ஸ்அப் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. இந்த செல்லிடப்பேசி வாங்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணச் சலுகையும் வழங்கப்படும்.
தமிழகத்தில் முதன்முறையாக மதுரை (ஸ்காட் ரோடு), அரசரடி, தல்லாகுளம் உள்ளிட்ட அனைத்து தலைமை தபால் நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துணை தபால் நிலையங்களில் செல்லிடப்பேசி விற்பனை செய்யப்படும்.
Comments
Post a Comment